ஒரு மங்கிய மாலை வேளையில்,
கொட்டும் பருவ மழையில்,
பேருந்து நிறுத்தத்தில், கூட்ட நெரிசலில்
நான்...என்னருகில் அவள்...என்னவள்!!
நிழற்குடையின் அடியில் மழைக் குடையோடு
மகிழ்ச்சி பொங்க மழையை ரசித்து கொண்டு அவள்...
அவளை ரசித்து கொண்டு நான்!!
மண் வாசனையை உதறித் தள்ளி விட்டு
அவளின் கூந்தலின் மனத்தை ஏற்றி கொண்டிருந்தது என் நாசி!!
குடைக்குள் வா, காய்ச்சல் வரும் என்று அவள் என்னை அழைக்க,
வேண்டாம் என்று மறுத்து, அவளின் அக்கறையை நான் ரசிக்க!!
சொர்க்கத்தில் கூட மழை பெய்யுமோ என்ற சந்தேகம்!!
கண் முன்னே தேவதை, கண்டிப்பாக இது சொர்க்கம் தான்!!
ஆயிற்று ஒரு வருடம்!! அதே மாலை வேளை!!
அதே பேருந்து நிறுத்தம்!!
கூட்ட நெரிசலிலும் தனியாக நான், மழைக் குடையோடு!!
அந்த மழை மட்டும் இன்னும் விடாமல்,
பெய்து கொண்டே இருக்கிறது..